
வவுனியாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் இன்று (22.08.2026) காலை வவுனியா பறயனாளங்குளம் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது இறப்பு தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்
முன்னைய செய்தி : வவுனியாவில் 62 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளார்
வவுனியா மில் வீதி பகுதியில் இருந்து 62 வயதுடைய தேவகாயம் தொம்பிலிப்பு என்பவர் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி காலை 7.00 மணியளவில், வவுனியா மில் வீதி பகுதியில் இருந்து அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔎 காணாமல் போனவரின் விபரங்கள்
பெயர்: தேவகாயம் தொம்பிலிப்பு
வயது: 62
காணாமல் போன நாள்: ஆகஸ்ட் 20, 2026
நேரம்: காலை 7.00 மணி
இடம்: மில் வீதி, வவுனியா
அணிந்திருந்த உடை: நீல நிற சாரம் மற்றும் வெள்ளை நிற அரைக்கை சட்டை
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தாலோ அல்லது அவரை எங்கேனும் கண்டாலோ உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
📞 076 923 4159
📞 072 110 4113
📞 077 198 3640
வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள் மற்றும் ஏனைய இடங்களில் குறித்த நபரை அவதானிக்குமாறும், தகவல் கிடைத்தால் உடனடியாக குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த தகவலை அதிகளவில் SHARE செய்து, காணாமல் போனவரை விரைவில் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.





