இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் கடும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

39

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் (25) செம்மஞ்சள் மட்டத்திலான அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.