சீனாவில் பூத்த காதல் : ரஷ்யப் பெண்ணை மணமுடித்த தமிழ் இளைஞன்!!

14

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்ய பெண்ணொருவரை காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துகொண்டார்.

சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர். இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய மரியா என்ற பெண்ணும் நாட்பாக பழகியுள்ளனர்.

நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர் உதயசங்கர், மரியா ஜோடி தங்கள் காதல் குறித்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளது.  அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி உதயசங்கர், மரியாவின் திருமணம் நடந்தது.

இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரஷ்யாவைச் சேர்ந்த மரியா தனது பெயரை ‘கீர்த்தனா’ என சூட்டிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையில் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.