வெளிநாட்டிலிருந்த தாய் வீடொன்றில் பல நாட்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : சிக்கிய இளைஞன்!!

98

புத்தளத்தில் 13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய, ஹிருவெல்பொல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் கடந்த மாதம் 01 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், அவர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய் வெளிநாட்டில் இருந்த காலத்தில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது அதே வீட்டில் வசித்து வந்த குறித்த இளைஞன், யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுமியை தொடர்ச்சியாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சிறுமி, நாடு திரும்பிய தனது தாயிடம் தெரிவித்த நிலையில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.