முதலையிடம் சிக்கிய 22 வயது இளைஞரின் சடலம் : பல மணிநேரம் மீட்க போராடிய மக்கள்!!

196

கொழும்பு – பிலியந்தலை,கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் சாயுரபுர பகுதியை சேர்ந்த ஷெஹான் தாரகா (22) வயது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கரடியானா குப்பைக்கிடங்கிற்கு முன்னால் உள்ள ஆற்றில், முதலையால் உண்ணப்பட்ட நிலையில் மிதந்த சடலத்தை பணியாளர்கள் கண்டுள்ளனர்.

இதன்பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபோது, ​​சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உள்ளூர் மக்களுடன் இணைந்து இளைஞரின் உடலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலையின் பிடி தடையாக இருந்துள்ளது. இதனையடுத்து இளைஞரின் உடலை மீட்க வனவிலங்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.