வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 51.25% மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி!!

174

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் படைத்துள்ளனர்.

இப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 160 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், அவர்களில் 82 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 51.25 சதவீதச் சித்தியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 100 புள்ளிகளுக்கு மேல் 59 மாணவர்களும் (36.87%), 70 முதல் 100 புள்ளிகளுக்கு இடையில் 16 மாணவர்களும் (10%), 70 புள்ளிகளுக்கு மேல் மொத்தமாக 157 மாணவர்களும் (98.1%) பெற்றுள்ள அதேவேளை, 3 மாணவர்கள் (1.8%) மட்டுமே 70 புள்ளிகளுக்குக் கீழ் பெற்றுள்ளனர்.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெனிற்றா சியாமினி செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் வழிகாட்டலிலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான முயற்சியினாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பினாலும் இவ் பெறுபேறு சாத்தியமாகியுள்ளது.