
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.4,000ஆல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.373,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.377,000 ஆக குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.





