அமேசான் விமான விபத்து : ஐவர் உயிரிழப்பு!!

99

அமெரிக்காவின் மியாமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமேசான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வானூர்தி ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை. இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விமான விபத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு 11 பேரை இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.