செப்டம்பர் 16 அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைப்பு!!

1292

Ele

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய மின்கட்டணத்தை 25 வீதம் குறைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 16ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.