மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்!!

18

கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.​

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.

​முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களின் ஊழியர்களும், தங்கள் கப்பல்களை உடனடியாக அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்துமாறு IRGC எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.