
சர்வதேசக் கிரிக்கெட் சபையால் தடைசெய்யப்பட்ட இலங்கை வீரர் சசித்திர சேனநாயக்க உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
சசித்திர சேனநாயக்க பந்தை விதிமுறைகளை தாண்டி வீசி எறிகின்றார் என சர்வதேச கிரிக்கெட் சபை அண்மையில் தடைசெய்தது.
இதனைத் தொடர்ந்து இவர் அவுஸ்திரேலியா சென்று தனது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து நாடு திரும்பினார்.
இதனால் இவரது பந்துவீச்சில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது. இதன் படி நவம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ள உள்ளூர் போட்டிகளில் சசித்திர சேனநாயக்க விளையாடவுள்ளார்.





