3 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ : கோபத்தில் சொந்த மகளை கொன்ற தந்தை!!

23

அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் சோபியா என்ற 22 வயது பெண் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் ஒருவருடன் சோபியா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது.

இதனால் கடும் கோபமடைந்த சோபியாவின் குடும்பத்தினர், சமூக அவமானத்துக்கு பயந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து ஆகஸ்ட் 12ம் திகதி இரவு சோபியாவை மோட்டார் சைக்கிள் சவாரிக்கு செல்வோம் என்று அவரது தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் அவரது 38 வயது சகோதரர் மொஹமந்த் ஹபில் ஆகிய இருவரும் வெளியே அழைத்து சென்றுள்ளனர்.

கெல்ஜிபுரா கிராமத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண் பாதையில் பைக்கை நிறுத்திய சகோதரர் ஹபில், சோபியாவின் தலையில் இரும்பு சுத்தியால் மூன்று முறை தாக்கியுள்ளார்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக மீண்டும் சோபியாவின் உடலை சாலைக்கு கொண்டு வந்து, வாகன விபத்து போல் சித்தரிப்பதற்காக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், அவர்களையும் சேதப்படுத்தி கொண்டனர்.

பின்னர் பொலிஸார் தகவல் கொடுத்த அவர்கள், கெல்ஜிபுரா சந்திப்பு அருகில் வேகமாக வந்த கார் ஒன்று தங்களை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், இதில் தன்னுடைய சகோதரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபியா அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். சோபியாவின் தந்தை மற்றும் சகோதரர் அளித்த விவரங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்த காரணத்தினால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ குறித்தும், சோபியா மீது குடும்பத்தினர் கொண்டிருந்த கோபம் குறித்தும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் சோபியாவை அடித்து கொன்றுவிட்டு விபத்து போல் காட்சிப்படுத்தியதையும் பொலிஸார் விசாரணையில் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் சோபியாவின் தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் சகோதரர் மொஹமந்த் ஹபில் இருவரும் கைது செய்யப்பட்டு கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.