இறுதிக் கிரியைக்கு சென்ற தாயும் மகனும் விபத்தில் பரிதாபமாக பலி!!

124

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரதன்கடவல நகரில் நேற்று (09.09.2026) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள், 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகனான 24 வயதுடைய நிகேஷ் ருவந்த தில்ஷன் என்பவர்களாகும்.

உயிரிழந்த இளைஞன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.