பெட்ரோலை பழச்சாறாக மாற்றிய விசித்திர போதகர் : பரபரப்பு வீடியோ!!

731

Fstr

தென்னாபிரிக்காவில் கிறிஸ்துவ போதகர் ஒருவர் பெட்ரோலை அண்ணாச்சி பழச்சாறாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் ப்ரிடோரியா நகரத்தில் லெசகோ டானியல் என்ற கிறிஸ்துவ போதகர் மக்களின் முன்னிலையில் எரியும் பெட்ரோலை பழச்சாறாக மாற்றியுள்ளார்.

இவர் தேவாலயத்தில் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பெட்ரோலை பாத்திரம் ஒன்றில் ஊற்றி எரிய வைத்துள்ளார்.பின்னர் அதனை கூட்டத்தில் இருந்த ஒருவரை சுவைக்க கூறியுள்ளார்.



ஆனால் குடித்த அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்ததால் அனைத்து மக்களும் அலையென திரண்டு நடனமாடிக் கொண்டு சுவைக்க முன்வந்துள்ளனர்.

இதனை குடித்த முதல் நபர் கூறுகையில், இதனை குடித்ததில் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விஷ தன்மை வாய்ந்தது, இதனை குடித்தால் மயக்கம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படும் என்ற நிலையில் இவருக்கு ஏதும் ஏற்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.