இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

19

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபா குறைந்துள்ளது.

இதன்படி, இன்று (11.09.2026) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.

அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.