வவுனியாவில் A/L 2026 மாணவர்களுக்கான அதிஷ்டம் : திறன் மேம்பாட்டுடன் உலகை வலம் வர வாய்ப்பு!!

56

வவுனியாவில் 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய (G.C.E. Advanced Level) மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் நோக்கில் விசேட ஒருநாள் திறன் மேம்பாட்டுச் செயலமர்வு (Skill Development Workshop) எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் (UC Cultural Hall) நடைபெறவுள்ளது.

சர்வதேச கல்வி நிறுவனமான IDM Nations Campus International இன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், சான்றளிக்கப்பட்ட நிறுவனப் பயிற்றுவிப்பாளரும் (Certified Corporate Trainer), Professional Business Coaching துறையின் உரிமம்பெற்ற தலைமைப் பயிற்றுவிப்பாளரும் (Licensed Master Coach), KTP Consultancy & Training நிறுவனத்தின் நிறுவனருமான திரு. K.T.பிரஷாந்தன் (K.T. Prashanthan) சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

மாணவர்களின் தனிநபர் திறன் மேம்பாடு, தலைமைத்துவத் திறன், தொடர்பாடல் திறன், தன்னம்பிக்கை மற்றும் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கான தயார்படுத்தல் என்பவற்றை மையப்படுத்தி இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.

இச்செயலமர்வில் பங்குபற்றுவதற்காக முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு IDM Nations Campus International நிறுவனத்தினால் விசேட கல்விச் சலுகைகள் மற்றும் சர்வதேச வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.

குறிப்பாக, மாணவர்களின் உலகளாவிய கற்றல் அனுபவத்தையும் தொழில்சார் பார்வையையும் விரிவுபடுத்தும் நோக்கில், இந்தியாவிற்கான விசேட சர்வதேச கல்விச் சுற்றுப்பயண வாய்ப்புகளும் (Special Travel Opportunities to India) இங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.