உலகின் சிறந்த செவிலியர் விருதை வென்ற பிரித்தானிய வாழ் மலையாளி : 2 கோடி பரிசு!!

17

உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார். கொச்சியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்றும் மலையாளி பெண்ணான அஜிமோல் பிரதீப் (Agimol Pradeep) உலகளாவிய Aster Guardians Global Nursing Award 2026 விருதைப் பெற்றார்.

இந்த விருது, உலகம் முழுவதும் 214 நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 1.34 லட்சம் செவிலியர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. அஜிமோல், லண்டனின் King’s College Hospital-இல் மூத்த Transplant Coordinator-ஆகவும், Salford University-இல் Honorary Senior Lecturer-ஆகவும் பணியாற்றுகிறார்.

அவரின் பணி, உடல் உறுப்பு மற்றும் ஸ்டெம்-செல் தானம், நர்சிங் கல்வி, மற்றும் சர்வதேச நர்சிங் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.

அவர் தொடங்கிய “உபஹார்” (Upahaar) முயற்சி மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டெம்-செல் தானதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, குறிப்பாக தெற்கு ஆசிய நோயாளிகளுக்கு உறுப்பு தானம் குறைவால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவியுள்ளது.

விழாவில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் உரையாற்றியபோது, “இந்த விருது, கேரளா உலகம் முழுவதும் அதிகமான செவிலியர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை நிரூபிக்கிறது. உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ் இருப்பார் என்பது பெருமை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், கேரளாவை உலக சுகாதார மையமாக மாற்றும் நோக்கில், சர்வதேச தரத்திலான caregiving பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த விருது, USD 250,000 (சுமார் ரூ.2 கோடி) பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்டது. அஜிமோலின் சாதனை, உலகளாவிய நர்சிங் துறையில் இந்தியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.