நால்வரின் உயிரைப் பறித்த குளிர்சாதனப்பெட்டி : அதிர்ச்சி சம்பவம்!!

16

இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் பெலகவி பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்திருக்கிறது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, வீட்டில் பாரதி, சாரதா, கங்கா, பிரியா ஆகிய நான்கு பேரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே பிரிட்ஜ் இருந்துள்ளது. நள்ளிரவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்ஜ் வெடித்திருக்கிறது.

தீ கொழுந்து விட்டு எறிந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் நான்கு பேரும் மரணமடைந்தனர். மேலும் இருவர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வந்ததால் ஃபிரிட்ஜ் வெடித்ததை அருகிலிருந்தவர்கள் பட்டாசு வெடித்ததாக நினைத்துவிட்டதாகவும் அதன்பின் விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.