
உலகக்கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அதிரடி காட்ட முடிவெடுத்துள்ளது இங்கிலாந்து.
உலகக்கிண்ணப் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக பல அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.
அதனால் இலங்கை அணியை வீழ்த்தி உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு சிறந்த இங்கிலாந்து அணியை அமைக்கும் திட்டத்தில் அணித்தலைவர் குக் இறங்கியுள்ளார்.
ஹாரி கர்னி, மொயின் அலி, ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணிக்கு வலுசேர்க்கும் நிலையில், இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணியில் ரவி போபரா மற்றும் ஜேம்ஸ் டெய்லர் இணைக்கப்படவுள்ளனர்.





