கடுமையான மின்னல் தாக்கம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

155

நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (18) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் ஏற்படும்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.