வீதியில் கண்டெடுத்த ஒரு பவுண் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்!!

20

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுண் மதிக்கத்தக்க கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(20.9.2026) இடம்பெற்றுள்ளது.

ஒரு பவுண் மதிக்கத்தக்க 3 இலட்சத்து 90ஆயிரம் ரூபாய் பெறுமதி யான தங்க கைச்சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டு பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க கைச்சங்கிலியை கண்டெடுத்த இருவரும் உரிமையாளரை வந்து பெற்றுக் கொள்ளுமாறு தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்தனர்.

இதனையடுத்து அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று சங்கிலியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.