மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் திகதி மகிழடித்தீவில் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், திருமணமாகி சில நாட்களிலேயே குறித்த இளம்பெண் தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






