மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம்!!

137

கண்டி, போகம்பரை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (21.09.2026) பிற்பகல் வீழ்ந்த மரமொன்றினால், அவ்வழியாகப் பயணித்த இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன.

நாட்டில் பல பகுதிகளிலும் கடும் மழையும் பலத்த காற்றும் வீசி வருவதோடு, கண்டி மற்றும் பிற பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.