யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்!!

16

யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி பகுதியில் இன்று (22.09.2026) காலை டிப்பர் வாகனமும் காரும் மோதி கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.