காரின் பின் இருக்கையில் இருவருக்கு அனுமதி : முன்றாவது நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

23

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி வசதி இல்லாத இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள், ஆசனப்பட்டி பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, பின்னாலுள்ள இருக்கையில் இரண்டு ஆசனப்பட்டி மட்டுமே இருந்தால், இரு பயணிகள் அங்கு பயணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு ஆசனப்பட்டி இல்லாமல் மூன்றாவது பயணி ஒருவர் நடுவில் பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.