
நாளை (30.09.2014) அன்று ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினரால் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நடைபெற இருக்கிறது.
பிரதேச செயலாளர் இ.குருபரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு நாளை மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவுச் சந்தியிலுருந்து பண்பாட்டு ஊர்வலம் புறப்பட்டு பிரதேச செயலக மண்டபத்தில் நிகழ்வுகள் யாவும் நடைபெறும்.
இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் ‘முத்தெழில்’ எனும் பண்பாட்டு மலரும் வெளியிடப்பட இருக்கிறது.
இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
-முல்லைத் தீபன்-





