பிக்பாஸ் பிரபலம் சீரியல் நடிகை வர்ஷிணி கைது!!

28

சென்னையில் இளைஞரிடம் பண மோசடி செய்ததுடன் இளைஞனை மிரட்டிய குற்றச்சாட்டில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது செய்ப்பட்டுள்ளார். சீரியல் நடிகை வர்ஷிணி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

குறும்படம் எடுப்பதற்காக முதலீடு செய்யுங்கள் எனக் தன்னை ஏமாற்றியதாகவும் மிரட்டி தாக்கியதாகவும் இளைஞர் ஒருவர் சீரியல் நடிகை வர்ஷினி மீது புகார் அளித்தார். கிண்டியில் 26 வயது இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பின் கூடுதலாக ரூ,27 லட்சம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் புகார் அளிக்க , நடிகை வர்ஷினி சஞ்சய் உள்ளிட்ட நான்கு பேர் மூது 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

தான் கேட்ட பணத்தை கொடுக்கவில்லையெனில் பொய் புகார் கொடுத்து உன்னை சிறையில் தள்ளுவேன் என நடிகை வர்ஷிணி மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.