கொய்யாப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

28

பழங்கள் என்றாலே அதில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, கொய்யாப்பழத்தில் அதிகமான சத்துக்கள் உள்ளன.  கொய்யாப்பழத்தில் எந்தளவு சத்துக்கள் உள்ளடங்கியுள்ளதோ, அதேயளவு சத்துக்கள் கொய்யா விதையிலும் உள்ளன.

கொய்யா விதைகளில் இருக்கும் நார்ச்சத்தானது, குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதில் உள்ளடங்கியிருக்கும் பொட்டாசியம் சத்து, இதய ஆரோக்கியத்தை மேம்டுபத்துவதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. தேவையற்ற பசியை குறைக்கிறது.

கொய்யா விதைகளில் அதிகளவான நன்மைகள் உள்ளன என்றபோதிலும் ஒரே நேரத்தில் அதிகளவான விதைகளை உட்கொள்ளும்போது அது குடலில் அழுத்ததை ஏற்படுத்தலாம்.  மேலும் விதைகளை நன்றாக கடித்துச் சாப்பிட வேண்டும். குறிப்பாக கொய்யாப்பழம் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பது ஜீரணத்துக்கு உதவும்.