அகதி முகாமிலிருந்து Super Singer மேடையில் சாதித்த 19 வயது இலங்கைத் தமிழ்ப் பெண்!!

57

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாகச் சென்ற குடும்பத்தில் பிறந்து, அகதி முகாமில் தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியைக் கழித்த 19 வயதான டிசாதனா, இன்று Super Singer இசைப் போட்டியின் மூலம் கவனம் பெற்றுள்ள இளம் பாடகியாக உருவெடுத்துள்ளார்.

சென்னையில் Physiotherapy கல்வியைத் தொடரும் அவர், சிறு வயது முதலே இசைப் பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார். Little Champs இசைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி தனது திறமையை வளர்த்துள்ளார்.

2026 பெப்ரவரி 1ஆம் திகதி நடைபெற்ற Super Singer Season 11 இறுதிப்போட்டியில் டிசாதனா இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவரது இசைப் பயணத்திற்கு தாயார் வழங்கிய ஆதரவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

தற்போது இளம் பாடகர்களுக்கு இசைப் பயிற்சி வழங்கி வரும் டிசாதனா, கல்வியையும் இசையையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

அகதி என்ற அடையாளத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கனவுகளை கைவிடாமல் முன்னேறிய தனது பயணம் மற்ற இளைஞர்களுக்கும் நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதே டிசாதனாவின் விருப்பமாக உள்ளது.