கொழும்பு செட்டித்தெரு பகுதியில் பரபரப்பு : நகை வியாபாரியை அடித்து இழுத்து சென்ற பொலிசார்!!

123

கொழும்பு செட்டித்தெரு பகுதியில் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகை வியாபாரி ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செட்டித்தெருவில் உள்ள நகை வியாபாரிகள் மற்றும் நகைக் கடை உரிமையாளர்கள் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான சிசிரிவி காட்சிகளும் பதிவாகியுள்ளதால் பலத்த எதிர்ப்பு நிலை அந்த பகுதியில் காணப்படுகின்றது.