மாங்குளம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் :வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக்கொலை!!

230

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பணிக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (24.09.2026) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலை சம்பவத்தை யார், எதற்காகச் செய்தார்கள் என்பது தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.