தியாகி திலீபனின் 39ம் ஆண்டு நினைவேந்தல் : பிரித்தானியாவில் சுழற்சி முறை அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!!

23

தியாகி திலீபனின் 39ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, பிரித்தானியாவில் 12 நாட்கள் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. பிரித்தானியாவில் கடந்த 15ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தியாகி திலீபனின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையிலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 23 (23/09) புதன்கிழமை அன்று பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.