கிளிநொச்சியில் நாவற்பழம் விற்றுக்கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம்!!

215

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளான். பரந்தன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், கிளிநொச்சி உருத்திரபுரம் – எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.

நாவல்ப்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.