யாழில் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது!!

406

அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களை கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசு பொருளாகிய நிலையில் 4 சிறுவர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(24.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அந்த காணொளியில் உள்ள உத்தியோகத்தர் அங்கு கடமையில் இருப்பவர் என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் 4 மாணவர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.