ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண் பலி!!

154

எல்ல, கித்தல்தெல்ல பிரதேசத்தில் ராவணா நீர்வீழ்ச்சியை பார்க்க சென்ற வெளிநாட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதான வெலென்டினா என்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவரும் ராவணா நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்றபோது, ​​அவர்களில் ஒரு பெண்ணின் கால் தவறி சுமார் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

பிரதேசவாசிகள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதினும், ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கமைய, சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.