வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!!

173

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் உள்ள A9 வீதியில் நேற்று(27.09.2026 இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கயஸ் (KDH) ரக வாகனம் நொச்சிமோட்டை பகுதியில் பயணித்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.