கொடூர தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த பெண் : அறையில் சிக்கிய கடிதம் : கணவன் எடுத்த விபரீத முடிவு!!

181

கம்பஹா – கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (29.09.2026) இடம்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வீட்டில் இருந்து உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த கொலையை உயிரிழந்த பெண்ணின் கணவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தையடுத்து சந்தேகநபரான கணவர் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் தொடருந்தில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் மற்றும் சந்தேகநபரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.