தனியார் பேருந்தும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து!!

153

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இரு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயற்சித்த போது,களுதாவளை கடற்கரை வீதி சந்தி அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து அருகிலிருந்த கோழி விற்பனை செய்யும் கடை ஒன்றில் மோதியதில் அக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் எவரும் காயமடைந்துள்ளனரா என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், விபத்து தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.