அதிகாலை நேர்ந்த விபரீதம் தந்தை பலி : ஆபத்தான நிலையில் மகன்!!

19

குருநாகல் – கல்கமுவ பகுதியில் கூடாரமொன்றினை காட்டு யானை தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்துள்ளார். நேற்று காலை (01.10.2026) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அப்பகுதியினை சேர்ந்த 54 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவரது 18 வயது மகன் கவலைக்கிடமான நிலையில் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் குறித்த இடத்தில் சிறிய கூடாரம் அமைத்து, நீண்ட காலமாக தர்பூசணிகள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இதன்போது கூடாரத்தில் நித்திரைகொள்ளும் போது அதிகாலை அப்பகுதிக்கு வந்த காட்டு யானை இவர்களை தாக்கியுள்ளது.