நடுவீதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளம் தந்தை!!

159

பொலன்னறுவை – கல்தம்பராவ, நிஸ்ஸங்க மல்லபுர பகுதியில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயது இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஈஸ்வரகே டான் தில்ஷான் மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது கணவர் நேற்று (30) பிற்பகல் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், வீட்டை விட்டு வெளியேறும் முன் தன்னிடம் வாக்குவாதம் செய்ததாகவும் உயிரிழந்தரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் இரவு வீடு திரும்பாத நிலையில், இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பிரதான வீதியில் உயிரிழந்து கிடந்த நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் மது அருந்தியபோது செய்யப்பட்ட கொலையா அல்லது வீதி விபத்தா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், மேலும் பல பொலிஸ் குழுக்கள் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.