அவுஸ்திரேலியாவில் 10 பேர் மீது காரால் மோதிய இலங்கை இளைஞர்!!

145

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், நியூகாசில் நகரின் வால்சென்ட் புறநகர்ப் பகுதியில் கார் ஒன்று 10 பேர் மீது மோதிய சம்பவம் தொடர்பில், இலங்கை வம்சாவளி 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திகா பாம்ப்ரிக் சமரசிங்க என்ற குறித்த இளைஞர் மீது, முறையற்ற முறையில் வாகனம் செலுத்தி உடல் காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவுஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.