வவுனியா செட்டிகுளத்தில் விபத்து : இளைஞன் பரிதாபமாக பலி!!

366

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

​மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

​இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த அருளப்பன் அருள்ராஜ் என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.

​சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.