வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து : போக்குவரத்து பாதிப்பு!!

211

வவுனியா நகருக்குள் நுழையும் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளானதில், வீதியில் சீமெந்து கொட்டப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியா A9 பிரதான வீதியில், நகருக்குள் நுழையும் பகுதியில் அமைந்துள்ள வரவேற்பு மதிலுடன் இன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.

விபத்தின் காரணமாக லொறியில் இருந்த சீமெந்து வீதியில் கொட்டப்பட்டுள்ளதுடன், அதிகளவான வாகனங்கள் பயணிக்கும் பிரதான வீதியாக இருப்பதால் அப்பகுதியில் புழுதி மற்றும் சீமெந்து துகள்கள் காற்றில் பரவுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதியால் பயணிக்கும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிக போக்குவரத்து காரணமாக சீமெந்து புழுதி காற்றில் எழுந்து சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், பொதுமக்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.