
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்திற்கு நாளை (06) வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான வானிலை பற்றிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த அறிவுறுத்தலின்படி, 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை மட்ட வெப்ப அனல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index) ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.





