முதலமைச்சர் விஜய் மற்றும் மனைவி சங்கீதாவுக்கு 600 கோடி சொத்து : நீதிமன்றத்தில் வழக்கு!!

13

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையில் இந்த கட்சிக்கு எதிராகவும் அவரின் வெற்றிக்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் போட்டியிட்டபோது வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை முழுமையாக தெரிக்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், தான் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது 600 கோடிக்கு மேல் தனக்கும் தனது மனைவிக்கும் சொந்தமான சொத்துக்கள் உள்ளதாக வேட்பு மனுவில் விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன் , குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.