ஹட்டனில் கோர விபத்து : கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன 14 வயதுச் சிறுவனின் உயிர்!!

30

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியின் விதுலிபுர பகுதியில் இன்று (07.10.2026 ) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்டுகலா தோட்டத்தின் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த, நோட்டன் பிரிட்ஜ் கணபதி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த ஜெயராம் போல்ராஜ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை வீட்டிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஹங்கராபிட்டிய பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிபயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவனின் சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,விபத்து தொடர்பில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.