கோர விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் பலி!!

68

களுத்துறையின் வஸ்கடுவ பகுதியில் இன்று காலை (08) இடம்பெற்ற வாகன விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று சுற்றுலாவுக்காக காலி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களில் ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து, எதிரே வந்த பல்கலைக்கழக பேருந்தின் மீது மோதுண்டுள்ளார்.

இதன்போது விபத்தில் பலத்த காயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த மாணவர், களனி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் பயிலும் 21 வயதான சித்தும் சங்கல்ப என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவர், தனது ஐந்து நண்பர்களுடன் கொழும்பிலிருந்து காலிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகிச்சென்று, எதிர் திசையிலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் பின் சக்கரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்து காரணமாக காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் பொலிஸார் வழமைக்கு கொண்டுவந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார். இந்த விபத்து சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.