கடுமையான மின்னல் : 22 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!!

116

மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடக்கு, வடமத்திய, தெற்கு மாகாணங்களில் இன்று(08.10.2026) கடுமையான மின்னல் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, நாளை (09) அதிகாலை 01.00 மணி வரை, 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் கடுமையான மின்னலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.