டிசம்பர் மாதத்திற்கு முன் தீவிரமடையும் எல் நினோ : வரலாற்றை மாற்றப்போகும் வெப்பத்தின் அளவு!!

104

இவ்வாண்டு நிலவும் ‘எல் நினோ’ டிசம்பர் மாதத்தில் உச்சத்தை அடைவதற்கு முன் மேலும் தீவிரமடையும் என்றும், இது பெப்ரவரி 2027 வரை நீடிக்க கிட்டத்தட்ட 100% வாய்ப்புள்ளது என்றும் உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் (WMO) பொதுச் செயலாளர் செலஸ்டே சௌலோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மாதாந்திர பருவநிலை அறிக்கையில் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், எல் நினோ நிகழ்வு பிப்ரவரி 2027 வரை நீடிக்க கிட்டத்தட்ட 100% வாய்ப்புள்ளது. 1950க்கு பிறகு நிகழ்ந்த மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது அமையக்கூடும்.

எல் நினோ நிகழ்வின் மையப் பகுதியாகத் திகழும் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இயல்பை விட 3.7 டிகிரி செல்சியஸ் (6.7 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்து சாதனை அளவை எட்டும்.

கணிக்கப்பட்டுள்ள இந்த வெப்பநிலை மாறுபாடானது, நவம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரையிலான காலத்தில் பதிவான முந்தைய சாதனையான 2.6 டிகிரி செல்சியஸை விட கணிசமாக அதிகமாகும்.

இந்த நிகழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் கடல் பகுதி, நாங்கள் இதுவரை அளவிட்டதிலேயே மிக அதிக வெப்பமான நிலையில் உள்ளது. எனவே, வெளியேற்றப்படுவதற்கு அதிகப்படியான வெப்பம் அங்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.