வாரியபொல யுவதி 10 லட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்!!

1100

Vaariyapola

குருநாகல் வாரியபொலவில் கடந்த மாதம் தம்மை கேலி செய்த இளைஞர் ஒருவரை தாக்கிய யுவதி நேற்று இலங்கை உயர்நீதிமன்றத்தில் பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதன்போது அவர் தமக்கு பொலிஸார் ஒரு மில்லியன் ரூபாய்களை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

அத்துடன் தமது அடிப்படை உரிமையான சட்டத்தின் முன் சமவுரிமை பாதுகாப்பு பொலிஸார் தம்மை கைதுசெய்தமையால் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மனுதாரரான அமல்கா திலினி தமது மனுவில் தாம் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் நிலையில், வாரியப்பொல நகருக்கு வந்த போது ஒருவர் தம்மிடம் தொலைபேசி இலக்கத்தை கோரியதாகவும் அதனை தாம் வழங்க மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தம்மீதான பாலியல் பார்வையை தவிர்த்துக் கொள்வதற்காகவே தாம் இளைஞரை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.